திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏக தின இலட்சார்ச்சனை விழா வரும் 10 ம் தேதி நடைபெற உள்ளது.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏக தின இலட்சார்ச்சனை விழா வரும் 10 ம் தேதி நடைபெற உள்ளது.
திருச்சி கல்லுக்குழியில் அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு வருகிற 10 ஆம் தேதி ஏக தின இலட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஏக தின இலட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. இரவு 8.05 மணிக்கு இலட்சார்ச்சனை நிறைவு மற்றும் மகா தீபாராதனை நடக்கும். காலை 9.00 மணி முதல் இலட்சார்ச்சனை பிரசாதம் தொடர்ந்து வழங்கப்படும்.
ஏக தின லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டணம் ரூ. 100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ச.ஐஸ்வர்யா, கோவில் செயல் அலுவலர் செ.செ.சரண்யா ஆகியோர் செய்து வருகின்றனர்.

