Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெகவில் பதவி வழங்குவதாகக் கூறி ரூ.1 லட்சம் வாங்கிய, பணத்தைத் திருப்பிக் கேட்ட எங்கள் உயிருக்கு தவெகவினரால் ஆபத்து.பெண்ணின் வைரல் ஆடியோ

0

'- Advertisement -

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருபவர் மகாராஜன் (வயது 37). இவரது மனைவி திவ்யா (வயது 35).

Ad banner

மகாராஜனிடம் தவெகவில் இளைஞரணி பதவி வழங்குவதாகக் கூறி ரூ.1 லட்சம் வாங்கியதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது வேடப்பட்டி தவெக நகரச் செயலாளர் பிரகாஷ் (வயது 31), ஷோரூமில் ரகளையில் ஈடுபட்டதாகவும் தம்பதியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

மேலும், பிரகாஷ் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், தவெகவைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாக விமர்சிப்பதாகவும் திவ்யா கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து பிரகாஷை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி மாவட்ட செயலாளர் உத்தரவிட்டார். இதனிடையே மகாராஜன் வடவள்ளி போலீசில் அளித்த புகாரின் பேரில் தவெக முன்னாள் நிர்வாகி பிரகாஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோல பிரகாஷ், மகாராஜனிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியிருந்ததாகவும், அதை பதிவு செய்து கொடுக்காமல் அபகரித்ததாகவும் மகாராஜன், அவரது மனைவி திவ்யா மீது பிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், திவ்யா தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எங்கள் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. பிரகாசுக்காக எங்களை கொலை கூட செய்வார்கள். நாங்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டோம். எங்களுக்கு ஏதாவது நடந்தால் தவெக பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், வெள்ளச்சாமி, பிரகாஷ் உள்ளிட்டவர்கள் தான் காரணம். காவல்துறையினர் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.