திருச்சி எல்ஐசி காலனியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் பிரம்மாண்ட உணவகத்துடன் புதிய கிளை திறப்பு விழா
திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனியில் அஷ்வின் ஸ்வீட்ஸ் புதிய பிரம்மாண்ட கிளை திறப்பு விழா
தமிழகத்தில் பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு,கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க முன்னணி நிறுவனமான ‘அஷ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் நிறுவனம் ‘ தனது புதிய கிளையை திருச்சி கே.கே. நகர் எல்ஐசி காலனி பேருந்து நிறுத்தம் அருகே பிரம்மாண்டமாகத் திறந்துள்ளது.
முன்னதாக சுந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த இக்கிளை, வாடிக்கையாளர்களின் வசதிக்காக கே.கே.நகர் எல்.ஐ.சி.காலனி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, விரிவான கட்டமைப்புடன் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அஷ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஆர்.வி. கணேசன் கலந்துகொண்டு, புதிய கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் நிறுவனத்தில், அனைத்து வகையான இனிப்பு வகைகள், கார வகைகள் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்கள் உயர்ந்த தரத்துடனும், நியாயமான விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பல லட்சம் மக்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளது.
தற்போதுபுதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்ஐசி காலனி கிளையில் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் அமர்ந்து சுவைத்து மகிழும் வகையில் விசாலமான சைவ உணவகமும் இங்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 
திறப்பு விழாவில் ஆப்பிள் பில்டர்ஸ் செந்தில் பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சாத்தனூர் சிவா,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜ் லூ , அஸ்வின் நிர்வாக இயக்குனர் செல்வகுமாரி, மேலான் இயக்குனர் அஸ்வின்,நிர்வாக இயக்குனர்கள் நிஷா, டாக்டர் அம்ருதா , சிபி மற்றும் ஏராளமான முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

