Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், 14-வது வார்டு பொதுமக்களுடன் இணைந்து வருகிற 24 ஆம் தேதி கவன ஈர்ப்பு அடையாளப் போராட்டம் நடத்தப்படும் . அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் அறிவிப்பு.

0

'- Advertisement -

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி 14 ஆவது வார்டில் பொதுமக்களை திரட்டி 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ..

Ad banner

அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சியின் மிக முக்கியமான பகுதியாக விளங்கும் 14-வது வார்டில், நீண்ட நாட்களாக மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்நிலையில்

வார்டில் மழைநீர் வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படவில்லை.

புதிய மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

சாலைகள் சேதமடைந்தும் பேட்ச் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

முக்கியமான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

மேலும் மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ள ஆன்மீகப் பகுதியும், கிரிவலம் செல்லும் பகுதியும், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய வணிகப் பகுதியுமான 14-வது வார்டுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை.

எனவே மக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

திருச்சி மாநகராட்சியின் 14-வது வார்டு பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் ஆகியோர் இணைந்து வருகிற 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) கவன ஈர்ப்பு அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.