Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காங்கிரஸ் சேவா தளம் சார்பில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு . திருச்சி யோகராஜ், லட்சுமி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை

0

'- Advertisement -

காங்கிரஸ் சேவா தளம் சார்பில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு . திருச்சி

Ad banner

யோகராஜ், லட்சுமி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் மாநில துணைத் தலைவர் யோகராஜ், தலைமையில்

புத்தூர் நான்கு ரோட்டில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி தெற்கு மாவட்ட சேவா சேவா தளதலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்வில்

சேவா தள மாநகர மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி சாந்தி, செயலாளர் ஜோதி, பொருளாளர் சார்புனிஷா உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட மகளிரும், சேவா தளம் மாநகர மாவட்ட துணைத் தலைவர் முருகன், செயலாளர் முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேவா தள

நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில்

பள்ளி ஆசிரியை ஐயம்மாளுக்கு. சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இந்திரா காந்தி அம்மையாரின் பிறந்தநாளை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட் டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.