Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

313 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 121 டன் ரேஷன் அரிசி உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ள திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை

0

'- Advertisement -

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை திருச்சி அலகில், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை 313 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 121 டன் ரேஷன் அரிசி உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Ad banner

இந்த சோதனைகளில் 121 டன் ரேஷன் அரிசி, அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட 240 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கப்படும் 14,175 கிலோ யூரியா உரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி குடிமை பொருள் வழங்கல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.