Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை இணை ஆணையர் ….

0

'- Advertisement -

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை

Ad banner

கால்நடை பராமரிப்புத் துறை இணை ஆணையர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து, திருச்சியிலும் நோய் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில்,

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோழிகளிடமோ அல்லது பறவைகளிடமோ இதுவரை பறவைக் காய்ச்சல் நோய்க்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

பண்ணைகளில் கோழிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

 

பொதுமக்களும், கோழிப் பண்ணை உரிமையாளர்களும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை.

மேலும கோழிகளில் ஏதேனும் அசாதாரண இறப்புகளோ அல்லது நோய் அறிகுறிகளோ தென்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.