Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் வருகை திருச்சியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் …ரோடு ஷோவும் உண்டு

0

'- Advertisement -

பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த ஏற்பாடு: 20 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் வருகை திருச்சியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Ad banner

திருச்சிக்கு வருகிற 20 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் வருகை தருகிறார். திருச்சி மகாத்மா காந்தியின் நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 134 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். மேலும் அவர் பிரமாண்டமான ரோடு ஷோவில் கலந்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வருகிற 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சிக்கு வருகிறார். அன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு திருச்சி வரும் முதல்வர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 500 நோயாளிகள் சிறப்பு சிகிச்சை பெறும் வகையில் ரூ.134 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

பிறகு அங்கிருந்து அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள ஓட்டலுக்கு செல்லும் அவர் அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து 100 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அந்தப் பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் விஜய் மதியம் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.

 

முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு, அண்மையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திருச்சி வருகை புரிந்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர், விமான நிலையத்தில் இருந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வரை ரோடு ஷோ நடத்த ஏற்பாடுகளையும், உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தார். முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுழைவாயிலில் ஏற்பட்டுள்ள பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கட்டிடத்தில் பெயர்ந்து கிடக்கும் சிமெண்ட் பூச்சிகள் புதுப்பிக்கும் பணிகளும் வளாகத்தின் உள்ளே செல்லும் பாதை ஆகியவற்றில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திலிருந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வரைசெல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதலமைச்சர் விஜய் திருச்சி பயணத்தின் போது பிரம்மாண்டமான ரோடு ஷோ நடத்தவும்,மக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சாலை வரை சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று முதலமைச்சர் விஜய் வரவேற்கும் வகையில் இரும்பு கம்பிகள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.முதலமைச்சர் விஜய் திருச்சி வருகை முன்னிட்டு த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.