உறையூர் வண்டிக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவில் 66–வது ஆண்டு திருக்கல்யாண உற்சவம்
திருச்சி உறையூர் வண்டிக்காரத்தெருவில் உள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 66–வது ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 10–ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி தினசரி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது இதில் ஸ்ரீ குமரகுருபரனுக்கும் ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வள்ளிநாயகிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர்.
திருக்கல்யாண நிகழ்வுக்கு பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

