Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வயதான பெண்களை கூட விடமாட்டேங்கிறான் , புஸ்ஸி ஆனந்திடம் ரூ 30 லட்சம் கொடுத்து இருக்கேன் என் மேல் எந்த புகார் செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, இனி இந்த கட்சியே வேண்டாம் .இரு பெண் தவெக நிர்வாகிகள் பேசிய பரபரப்பு ஆடியோ ..

0

'- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிழக்கு தவெகவில் ஆம்பூரை சேர்ந்த இரு பெண் நிர்வாகிகள் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Ad banner

அதன் செல்போன் உரையாடல் பின்வருமாறு:

பெண் 1 : பேசுறமாதிரியா இங்க நடந்து கிட்டு இருக்கு

பெண் 2 : ஏன்?

பெண் 1 : நகர செயலாளர் பிரவீன் இருக்காருல்ல, அவங்க வைப் போயி முதலமைச்சருக்கே கம்ப்ளைன்ட் பண்ணுச்சுக்கா. ஆனா, மாவட்டம் வந்து நாங்க பாத்துக்கறோம்னு சொல்லி காப்பாத்தி இருக்காரு.

பெண் 2 : இல்லக்கா. தளபதி போஸ்டிங்கல இருந்து எடுத்துருவாரு பாரு.

பெண் 1 : நவீன் சொல்லி இருக்கான், எவ்வளோ கம்ப்ளைண்ட் எம்மேல வந்தாலும் என்ன எடுக்க மாட்டாங்கோ. பொதுசெயலாளரை நான் எப்படி மேட்ச் பண்ணனுமோ பண்ணியாச்சு. ரூ.30 லட்சம், நகர செயலாளர் போஸ்டிங்க் வாங்கி இருக்கேன். உன்ன காப்பத்தறது என் கடமைன்னு சொல்லிட்டாருக்கா.

பெண் 2 : வாணியம்பாடி ஒன்றியத்துல , ……. நவீனோட 19 வீடியோ வெச்சினு காட்டி இருக்கான்

பெண் 1 : நவீன் குடிக்கற வீடியோ வெளியே வந்து ஆம்பூர், வாணியம்பாடியில அசிங்கமா பேசுறாங்க. தப்புபண்றவங்களை கூப்பிட்டு திட்டுவாங்கனு பாத்தா, இப்படி காப்பாத்தி விட்டா எப்படிக்கா.

பெண் 2 : தளபதியை அவன், இவன்னு அசிங்கமா பேசிய ஆடியோ கேட்டியா?

பெண் 1 : ஆங்… குருப்புல பாத்தேன்.

பெண் 2 : லேடீஸுங்க கிட்ட கூட காசு வாங்கிட்டு அசிங்கமா நடக்குறாங்க.

பெண் 1 : அம்மா, இந்த நவீன் டிவிகே மீட்டிங்க் வெச்சாவே, பொம்பளைங்க, ஒரு வயசானவங்கள கூட பாக்க மாட்டறான் கா. ஒரு பொண்ண கூட விடமா, இடுப்புக்கு கீழயே பாக்குறான்கா. குறுகுறுன்னு பாக்கறான். பார்வையே சரி இல்ல. என் வீட்டுகாரரு, எம்மா இதெல்லாம் பாத்துட்டு, நவீன் மீட்டிங்க், டிவிகே மீட்டிங்க்கே போகாதன்னு சொல்லிட்டாருக்கா. இதுக்கு மேல என்னை எங்கயும் கூப்பிடாத நான் வரமாட்டேன்.

பெண் 2 : நானே போக கூடாதுன்னுதான் முடிவு பண்ணிருக்கேன். கட்சியும் வேணாம்…..

இவ்வாறு உரையாடல் நடந்தது. தற்போது தவெக கட்சியை சார்ந்த பெண்களே கட்சி வேணாம் என பேசி கொள்ளும் ஆடியோ தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரலாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.