மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற வீடியோவை நம்பி ௹ .49 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற வீடியோவை நம்பி ௹ 49 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்
திருச்சியில் ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியரின் மனைவிடம் ரூ.49.03 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
மத்திய நிதியமைச்சர் பேசுவது போன்ற போலியான வீடியோவைக் கண்டு நம்பி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மனைவியிடம் ரூ.49 லட்சத்து 3 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி. இவரும் இவரது கணவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆவர். இருவரும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் அப்பெண் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தபோது, மத்திய நிதியமைச்சர் பேசுவது போன்ற வீடியோ ஒன்றைக் கண்டுள்ளார். அதில் வந்த தகவலை நம்பி தனது விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார். 
இதையடுத்து அவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் மத்திய அரசின் நிதித் துறையின் முதலீட்டு ஆலோசகர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அவர்களின் பேச்சை நம்பி, கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.49,03,000 பணத்தை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க முயன்றபோது, பணத்தை எடுக்க முடியாததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

