திருச்சியில் இன்று இந்திய நாடார் பேரவை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஜெ.டி .ஆர். சுரேஷ்
திருச்சியில் இன்று த. வெ.க.,இந்திய நாடார் பேரவை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அருள், தர்கா சௌகத், வெல்லமண்டி ஜவகர், ஜெ.டி .ஆர். சுரேஷ் வழங்கினர்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம்,இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.தமிழக வெற்றிக்கழக பிரமுகர், இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெ.டி .ஆர். சுரேஷ் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக துணை பொதுச்செயலாளர் அருள், கிழக்கு மாவட்ட செயலாளர் தர்கா சவுகத், வெல்லமண்டி ஜவகர் வர்த்தக அணி அமைப்பாளர் அகஸ்டின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு பேண்ட் சர்ட், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் நிர்மல்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பா. அருண்குமார்,
செயலாளர்கள் ஜீவா,சதீஷ், நாகநாதர் ஆர் செல்வ மகேந்திரன், டாக்டர் கிருஷ்ணசாமி, பகுதிச் செயலாளர் கௌதமன், சூர்யா சிவா,
நாகநாதர் சிவக்குமார், சீனி ராஜ்குமார், அஸ்வின் குமார், வர்த்தக துணை செயலாளர் பெரியநாயகம்.
மற்றும்
இந்திய நாடார் பேரவை
முதன்மைச் செயலாளர் பாலாஜி சுப்பிரமணி, தொழில்துறை இயக்குனர் கமல்தாஸ், நெல்லை நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர்கள் புங்கனூர் மகாராஜன், கணேசன், லால்குடி ஜான்ராஜ், பீமநகர் ஞானராஜ், துணைச் செயலாளர்கள் ஏர்போர்ட் சுப்பிரமணி, தர்மலிங்கம், கருமண்டபம் செந்தூர்ஆனந்த். மற்றும் முத்து செல்வன், பனை மற்றும் தென்னை மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ராஜசேகர் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

