Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை மறுநாள் தீபத் திருவிழா . மலைக்கோட்டை உச்சியில் 40 அடி உயர கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் படம் எடுக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை ..

0

'- Advertisement -

நாளை மறுநாள் தீபத் திருவிழா . மலைக்கோட்டை உச்சியில் 40 அடி உயர கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் படம் எடுக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை ..

Ad banner

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் நாளை மறுநாள் 24ஆம் தேதி 40 அடி உயர கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

 

தென் கயிலாயம் என போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தன்று, 273 அடி உயரமுள்ள மலைக்கோட்டை உச்சியில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில், 40 அடி உயரத்தில் உள்ள கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நாளை மறுநாள் 24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்று மாலை 6 மணி அளவில் மலைக்கோட்டை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.

இதை அடுத்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது, மலைக்கோட்டை உச்சியில்

மலை மீது

40 அடி உயர கோபுரத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில், 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரித்த திரியை ஊற வைத்தனர்.

கார்த்திகை தீப திருநாள் அன்று மாலையில் தாயுமான சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மேள தாளங்களுடன் தீப ஜோதி மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும் இதனை செய்தியாளர்கள் போட்டோ வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள் ஆனால் இந்த ஆண்டு இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

 

 

மலைக்கோட்டை மகா தீபத்தை தரிசித்த பின்னர் திருச்சி மாநகர பகுதி மக்கள், தத்தம் வீடுகளில் தீபம் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலின் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் வெயில், மழை, காற்று பாராமல் மூன்று நாட்கள் சுடர்விடும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் இதை டிவியில் அல்லது பத்திரிகைகளோ காண முடியாது.தமிழ்ல வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் மலைக்கோட்டை கோயியில் விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை தயாரிக்கும் இடத்தை படம் பிடித்த பின்னர் எந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.