Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜி கார்னரில் மூதாட்டி கழுத்தை நெரித்து கொன்று தீபாவளியை கொண்டாடிய சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அண்ணன் தம்பி உள்ளிட்ட 3 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சியில் 2 பவுன் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று உடலை முட்புதரில் வீசிய போதை சகோதரர்கள் 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Ad banner

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானம் அருகில் முட்புதரில் கடந்த 7ம்தேதி 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்த பொன்மலை காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பார்த்தபோது மூதாட்டி கழுத்து நெரிக்கப்பட்ட தடம் பதிந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சகோதரர்களான ஆட்டோ டிரைவர் ராஜசேகர்(வயது 48), எலக்ட்ரீசியன் ஆறுமுகம் (வயது 46), அதை பகுதியை சேர்ந்த தொழிலாளி கார்த்திக் (வயது 40) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கொலை செய்யப்பட்ட மூதாட்டி புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த திருமதி (வயது 75) என்பதும், கடந்த 7ம் தேதி வீட்டு வேலைக்காக திருச்சி வந்தபோது 3 பேரும் அவரை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளனர்.

போதையில் இருந்த மூவரும், 2 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு ஆட்டோவில் வைத்தே மூதாட்டியின் வாயை பொத்தி கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துள்ளார். போலீசில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக உடலை பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானம் அருகே முட்புதரில் வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சகோதரர்கள் உட்பட 3 பேரை நேற்று போலீசார் கைது கைது செய்து உள்ளனர்.

இந்த நகையை விற்று தீபாவளி அன்று ரூ.20 ஆயிரத்திற்கு வீட்டிற்கு வெடி வாங்கி தந்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி உள்ளனர் என தெரிய வந்துள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.