Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மதுபோதையில் அரசு பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து ,

0

'- Advertisement -

திருச்சியில் மதுபோதையில் அரசு பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து ,

Ad banner

திருச்சியில் அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்

​திருச்சியை அடுத்த லால்குடி பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிபவர் திவாகர் (வயது 43). இவர்

​நேற்று முன்தினம் அதிகாலை 4.10 மணியளவில், அரசு பஸ்சை லால்குடியில் இருந்து திருச்சிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, திருச்சி கரியமாணிக்கம் அருகே உள்ள சிறுகம்பூர் செந்தாமரைக்காள்குடியைச் சேர்ந்த பாலராஜ் மகன் சசி பாலாஜி (வயது 26) என்பவர் மதுபோதையில் பஸ்சில் பயணம் செய்துள்ளார். இந்தஅரசு பஸ் திருச்சி

​ஈ.வி.ஆர். சாலையில் உள்ள எம்.ஜி.எம். அரசு மருத்துவமனை பஸ் நிறுத்ததில் வரும்பொழுது இறங்குவது தொடர்பாக, டிரைவர் திவாகருக்கும் சசி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சசி பாலாஜி, டிரைவரை ஆபாசமாக திட்டி, கத்தி,கையால் தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

​இந்த தாக்குதலில் திவாகருக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

​இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்போது திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை கீழத் தெருவில் வசித்து வரும் சசி பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.