Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பட்டியல் சமுதாயத்தினர் அரசியல் அதிகாரத்துக்கு வருவதை திமுக விரும்பவில்லை இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன் முருகேசன் திருச்சியில் பேட்டி

0

'- Advertisement -

அரசியல் அதிகாரத்திற்கு வருவத்தை விரும்பவில்லை : திமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் விலகல் நிறுவன தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் திருச்சியில் பேட்டி

Ad banner

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் திருச்சி பொன் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்  2026 ஆம் ஆண்டு வரை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் ஆதரவளித்து கூட்டணியில் இருந்து வந்தது. இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை, வெயில் என்று பாராமல் அவர்களிடம் இருந்தும் திமுக தலைமையில் இருந்தும் எந்தவிதமான நிதியும் பெறாமல் எங்களுடைய சொந்த நிதியை கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தோம்.இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை மாறாக பட்டியல் இன மக்கள், தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள், அருந்ததி சமுதாய மக்கள் இப்படி யாருக்கும் திமுக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

சமூக நீதி பேசும் திமுகவில் உண்மையான சமூக நீதியில்லை. போலியான சமூக நீதிதான் உள்ளது. அவர்கள் பட்டியல் சமுதாயத்தினர் அரசியல் அதிகாரத்துக்கு வருவதை விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து இனி நாங்கள் திமுக கூட்டணியில் பயணிப்பது சரியாகாது என்று முடிவு எடுத்து திமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் வெளியேறுகிறது.அடுத்த கட்டமாக நாங்கள் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து விரைவில் பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும்.திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம்

இவ்வாறு வழக்கறிஞர் பொன் முருகேசன் கூறினார்..

பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி, சக்திவேல் , வடிவேல் , மகாமுனி, முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.