Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் கைது ..

0

'- Advertisement -

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் கைது ..

Ad banner

திருச்சி உயயக் கொண்டான் திருமலை மேலத் தெரு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 52) இவரது மகளுக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி மாவட்டம் முசிறி திருத்திய மலை பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 28) என்பவர் ரூ . 50,000 பணம் வாங்கி உள்ளார். மேலும் இவர் 8 பேரிடம் இதே போன்று வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூபாய் 50,000 வீதம் 5 லட்சம் பணம் மற்றும் மேலும் 32,000 பணத்தை மருத்துவ பரிசோதனைக்கும் வாங்கி உள்ளார். பிறகு நீண்ட காலமாகியும் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார்.

இந்நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நெருக்கடி செய்ததை தொடர்ந்து திடீரென்று வேலை கிடைத்ததாக போலி நியமன கடிதத்ததை சூர்யா கொடுத்துள்ளார்.பிறகு அதனை விசாரித்த போது போலி கடிதம் என்றும்,தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சசிகுமார் இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார் அந்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய சூர்யாவை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.