Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய திருச்சி முன்னாள் எம்பி இளவரசன் பரபரப்பு பேட்டி

0

'- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள். முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து திடீர் ராஜினாமா. எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு.

 

Ad banner

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான இளவரசன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக

இளவரசன்

திருச்சியில் இன்று நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பணியாற்றி வருகிறேன்.எனக்கு பல்வேறு பொறுப்புகளை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்து அழகு பார்த்தார்.ஆனால் இன்றைக்கு மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி

பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. (11 தேர்தல்களை தொடர் தோல்வி ) ஆனால் அந்தத் தோல்விகளுக்குத் தான் பொறுப்பேற்பதாக இ.பி.எஸ் ஒருமுறை கூடக் கூறியதில்லை.

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு அணிகளை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறிவிட்டார்.

அவரது பிடிவாதப் போக்கே அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்குக் காரணம் ஆகும்.

திமுகவின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததாக தெரிய வருகிறது .

அதிமுகவை அழிக்க நினைத்தவர்களோடு கூட்டணி வைக்க முயன்றுள்ளார்.

கட்சியில் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டு,

பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தற்பொழுது பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

தோல்விகள் குறித்து ஒவ்வொரு முறையும் இ.பி.எஸ்ஸிடம் நேரில் சுட்டிக்காட்டியும், அவர் யார் பேச்சையும் கேட்பதில்லை முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவதை அவர் இன்னும் உணரவில்லை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றாலும், எம்.ஜி.ஆரின் சில கொள்கைகளை முதலமைச்சர் விஜய் தற்பொழுது பின்பற்றி வருகிறார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் விஜயிடம் இருக்கிறது.

ஒருவகையில் அதிமுகவில் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றப்பட்டால் தனது அரசியல் நிலைப்பாடு மாறும்  என இளவரசன் கூறினார்.

திருச்சியில் முன்னாள் எம்.பி இளவரசனின் இந்த திடீர் விலகல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.