த.வெ.க அரசை கண்டித்து டிசம்பர் 2 ம் தேதி திருச்சிகிழக்குத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தை மாநகர செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் பார்வையிட்ட அதிமுகவினர்

த.வெ.க அரசை கண்டித்து டிசம்பர் 2 ம் தேதி திருச்சிகிழக்குத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள இடத்தை மாநகர செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் பார்வையிட்ட அதிமுகவினர்
திருச்சியில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..
தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழக அரசைக் கண்டித்து, வருகிற டிசம்பர் 2, ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே இந்த ஆர்ப்பாட்டம்
அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 85 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது .
இந்நிலையில் வருகிற டிசம்பர் 2 ம் தேதி திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை
எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் யோகநாதன், டி. என். சிவகுமார்,அம்மா பேரவை மாநில இணை செயலாளர் அரவிந்தன்,பகுதி செயலாளர் வசந்தம் செல்வமணி, நிர்வாகிகள் நத்தர்ஷா ,சூப்பர் நடேசன்,உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்டனர் .

எடப்பாடி பழனிசாமி திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

