வி.எஸ்.பாபு மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட முதல்வர் விஜயின் திருச்சி பயணம் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது

வி.எஸ்.பாபு மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட முதல்வர் விஜயின் திருச்சி பயணம் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது
ரூ.134 கோடி திட்ட மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் டிசம்பர் 1 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று திருச்சி வருகை ஏற்பாடுகள் தீவிரம் …
திருச்சியில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுநாள் டிசம்பர் 1 ம்தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் கடந்த வாரம் 23 ஆம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காலை திருச்சிக்கு வருகை தந்து திருச்சி புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் ரூ.134 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 தளங்களாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதாக இருந்தது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சித்திட் டப்பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட ‘ரோடுஷோ’ செல்லவும் திட் டமிட்டு இருந்தார். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை, சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
இதற்கிடையில் கொளத்தூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கடந்த 22 ம் தேதி பிற்பகலில் உடல்நலக்கு றைவால் காலமானார். இதனால் முதல்-அமைச்சரின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ( டிசம்பர் 1 ம் தேதி) முதலமைச்சர் விஜய் திருச்சி வருகை தந்துஅரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சி வருகை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. திருச்சி விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
முதலமைச்சர் விஜய் திருச்சி வருகையை முன்னிட்டு த.வெ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

