Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தன்னைக் கொடுமைப்படுத்தி கருவை கலைக்க கோரி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவரது மனைவி மீனாட்சி கடுமையான குற்றச்சாட்டு….

0

'- Advertisement -

தமிழக நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவரது மனைவி மீனாட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Ad banner

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி, தாம் கர்ப்பமாக இருந்தபோது கருக்கலைப்பு செய்யக் கூறி அடித்துத் துரத்தியதாகவும், அதன்பிறகு தன்னுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

 

தனது இரண்டாவது குழந்தையுடன் பேசக்கூட அனுமதிக்கப்படாமல் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை மற்றும் வீடு எங்குள்ளது என்பது கூடத் தெரியாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாகத் தங்களுக்குள் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், தம்மை மட்டுமின்றி தனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். போதிய உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட மறுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பு விஜய்யிடம் கணக்காளராகப் பணியாற்றி வந்த வெங்கடரமணன் தற்போது அமைச்சராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கு தொடர்ந்ததாக மீனாட்சி தெரிவித்துள்ளார்.

 

மீனாட்சியின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு, மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஜீவனாம்சம் மற்றும் இழப்பீடு கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்திற்காகக் கோரப்பட்ட மாதத் தொகை குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், குழந்தையின் பாதுகாப்பு மற்றும் காப்பீடு தொடர்பாகச் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வெங்கடரமணன் மீது அவரது மனைவி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.