திருச்சியில் அகில உலக வேளாளர், வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும்.
அகில உலக வேளாளர், வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்.
அகில உலக வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு திருச்சி சார்பில் வேளாளர், பிள்ளைமார், வேளாளர் ,முதலியார் கொங்கு வேளாளக் கவுண்டர், வெள்ளாஞ்செட்டியார் உட்பிரிவுகள் ஒன்றிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று உறையூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அண்ணாதுரை பிள்ளை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கதிரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ..லட்சுமணன் பிள்ளை தியாகராஜன் பிள்ளை ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கேற்ற நடவடிக்கை எடுத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றோம். ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது 43 உட்பிரிவினரும் தங்கள் ஜாதிப் பெயர்களுக்கு முன்னால் வேளாளர் ,வெள்ளாளர் என்பதை தெளிவுபடுத்தி அதன் பின்னர் உட்பிரிவுகளை பதிவு செய்ய பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு லட்சம் பேர் அளவுக்கு வேளாளர் மற்றும் வெள்ளாளர்கள் உள்ளனர். ஆகவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் எங்கள் சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

