Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது :திருச்சி ஓய்வு பெற்ற பெல் ஊழியரிடம் ரூ. 94 லட்சம் நூதன மோசடி….

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் பெல் ஊழியரிடம் சிபிஐ அதிகாரி என மிரட்டி ரூ 93.95 லட்சம் பணம் மோசடி,

Ad banner

பண மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு ஏற்ப டிஜிட்டல் அரெஸ்ட் சம்பவங்கள் அடிக்கடி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இது ஒரு போலி என்று பலமுறை போலீசார் பத்திரிக்கை மற்றும் மீடியாக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் சைபர் க்ரைம் குற்றங்கள்

தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சியில் அப்படி ஒரு சம்பவம் நடந்து உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு ….

 

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன் இவர் ஓய்வு பெற்ற பெல்

ஊழியர்.

இவருக்கு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் கஸ்தூரி ரங்கனிடம் தன்னை பெங்களூரு போலீஸ் நிலையத்தில்

உள்ள காவல் உதவியாளர் என்று அறிமுகம் செய்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் சதாகான் என்பவர் பண மோசடியில் ஈடுபட்டு சிபிஐயால்

கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும்,அவரது வங்கி கணக்கை சோதனை செய்தபோது அதில் நிறைய பணம் இருந்ததாகவும், அந்த பணம் தங்களுடைய வங்கி கணக்கில்

சேர்ந்துள்ளது. அதனால் நீங்களும் கைது செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த

கஸ்தூரி ரங்கன் பேச முடியாமல் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை புரிந்து கொண்ட அந்த மர்மஆசாமி அவரை மிரட்டி பணம் பறிக்க முடிவு செய்து பணம் கேட்டுள்ளார். முதலில் பணத்தை அளிக்க கஸ்தூரி ரங்கன் தயங்கி உள்ளார். இதனை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு மறுநாள் மீண்டும் பேசி அவரை மிரட்டி உள்ளார். ஒரு கட்டத்தில்

விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரியிடம்போனை கொடுக்கிறேன் அவரிடம் பேசுங்கள் என்று கூறி மற்றொரு நபரிடம் பேச வைத்துள்ளார். அந்த மர்ம ஆசாமி தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும், இந்த வழக்கில் நீங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள் என்று கேட்டு அவரை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன கஸ்தூரி ரெங்கன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து மர்ம ஆசாமி கூறிய வங்கி கணக்கில்

சிறிது நாட்களாக ரூபாய் 93 லட்சத்தை 95 ஆயிரம் பணத்தை போட்டுள்ளார். பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்து கஸ்தூரி ரங்கன் அதிர்ச்சி அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து கஸ்தூரி ரங்கன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிந்தார், அந்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரி போல பேசி மிரட்டி பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவர் கட்டுமான பணி செய்து வருகிறார், இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவருடைய செல்போனுக்கு ஒரு லிங்க் வந்து உள்ளது இதை அடுத்து அவர் அந்த லிங்கை கிளிக் செய்தார்.கிளிக் செய்த சிறிது நேரத்தில் அவருடைய செல்போன் எண்ணிற்கு ஓ டி பி நம்பர் வந்தது. அந்த  ஓ டி.பி நம்பரை அவர் செல்போனில் ஓகே செய்த சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்த்து 84 ஆயிரத்து 500 ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியராஜ் தன்னை யாரோ ஏமாற்றி பணத்தை திருடி விட்டனர் என்பதை உணர்ந்த பின் அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.