Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில் எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்,

0

'- Advertisement -

திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில்

Ad banner

எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்,இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எஸ் ஆர் எம் யூ கோட்ட பொதுச் செயலாளர் வீரசேகரன் பத்திரிகையாளரிடம் பேசியபோது கூறியதாவது:-

ரயில் பயணிகளுடைய உயிருக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மிக மிக முக்கியமான, கேந்திரமான பகுதியானது சி&டபிள்யூ (C&W) டிபார்ட்மென்ட் ஆகும். அதாவது மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்டிலேயே, ரயில் இன்ஜினாக இருந்தாலும் சரி அல்லது ரயில் பெட்டியாக இருந்தாலும் சரி, அதனுடைய அடிப்பாகத்திலே (Under-chassis)… பிரேக் சரியாக இருக்கிறதா, வீல் சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்க்கக்கூடிய ஒரு பகுதியாக இங்கே நம்முடைய சி&டபிள்யூ டிபார்ட்மென்ட்டைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

​அவர்களுக்கு உரிய பாதுகாப்பான பொருட்களை, டூல்ஸ் அண்ட் பிளான்ட் (Tools and Plant) கொடுக்கிறார்களா என்றால், இல்லை. அதைவிட மிக மிக முக்கியமாக ஒரு வண்டிகளை… அதாவது ஏறக்குறைய திருச்சி ஜங்ஷன் பகுதியிலே 172 வண்டிகள் அப் அண்ட் டவுன் (Up and Down) ஆக வந்து கொண்டிருக்கின்றன, சென்று கொண்டிருக்கின்றன. தினந்தோறும், மாசத்துல இல்லை, தினந்தோறும்!

​அந்த தினந்தோறும் போகின்ற வண்டிகளைப் பராமரிக்கின்ற முக்கிய பொறுப்புகளை, ஒரு சிலவற்றை எஸ்.ஆர்.எம்.யு (SRMU) பேரியக்கத்திடம் கேட்காமல், தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கான்ட்ராக்ட் (Contract) விட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்குச் சொல்லப்போனால் வாட்டரிங் (Watering)… 23, 24 கோச் (Coach) வருது, அந்த கோச்சைப் பார்க்கிறதுக்கு 20 பேரு ஒப்பந்தம் போட்டுட்டு வராங்க, ரெண்டு பேர்தான் வராங்க. அதே அந்த 20 பேரும் மூணு இடத்துல கான்ட்ராக்ட். ஏன்னா, கார்னர் கான்ட்ராக்ட்டுக்கும் (Corner contract) அதிகாரிகளுக்கும் ஒரு ஒப்பந்தம்.

​அந்த வண்டியைத் தனியார் சரியா தண்ணி பிடிக்கலைன்னு சொன்னா, சார்ஜ் ஷீட் (Charge sheet) யாருக்குன்னா ரயில்வே தொழிலாளர்களுக்கு, பெர்மனன்ட் எம்ப்ளாய்க்கு (Permanent employee). அதுமட்டுமல்ல, இப்பொழுது திருச்சி ஜங்ஷன் பகுதியிலே தொழிலாளர்களுக்கு எதிராக அல்ல அவர்களுடைய ஆர்ப்பாட்டம், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். பயணிகளின் உயிருக்கு குறிவைக்கின்ற இந்த சி.இ.டி.எம்.இ (Sr. DME) நிர்வாகத்தை எதிர்த்துதான் அவர்கள் இப்பொழுது முறைப்படி வேலை, ‘ஒர்க் டூ ரூல்’ (Work to Rule) போகிறார்கள். வேலை நிறுத்தம் செய்யல, நல்லா புரிஞ்சுக்கோங்க… நீங்க வேலை நிறுத்தம்னு ஹெடிங் (Heading) போட்டுறாதீங்க. முறைப்படி வேலை!

​’ஒர்க் டூ ரூல்’ செய்கிறார்கள். காரணம், சரியான உபகரணங்கள் இல்லை. நூறுக்கு, இந்த பக்கம் யார்டுல (Yard) சொல்றாங்க, யார்டுல 100% இருக்கணும்னா 10% கூடப் பொருள், உபகரணம் கொடுக்கறது இல்லை. வேலைகள் எத்தனை பேர் தெரியுமா இங்க தேவை? மொத்தமாக சி&டபிள்யூ டிபார்ட்மென்ட்டுக்கு அவர்கள் கணக்குப்படி, நம்ம கணக்குப்படி இல்லை… நம்மிடம் பேச்சுவார்த்தை, பின் பாயிண்டிங் மீட்டிங் (Pin-pointing meeting) நடத்தணும், அது நடத்தல. அவங்க எவ்வளவு தெரியுமா கொடுக்கணும் இப்ப? 226 பேர் கொடுக்கணும். எவ்வளவு பேர் தெரியுமா இப்ப கொடுத்திருக்காங்க? 60 பேரு. 226 எங்க இருக்கு, 60 எங்க இருக்கு?

​இதை, இந்த 60 பேரைக் கூட என்ன பண்றாங்க… நம்முடைய தொழிலாளர்கள் பி.ஜி 1 (BG1), பி.ஜி 2 (BG2)-ன்னு பிரித்து வேலை பார்க்கிறாங்க. அதாவது பி.ஜி 1-ல இத்தனை பேரு, பி.ஜி 2-ல இத்தனை பேரு. ஒரு இடத்துல அதிகமாக வரும் பொழுது வண்டி, இங்கிருந்து அங்க போய் பார்ப்பார்கள், அதை கிளப் (Club), மெர்ஜ் (Merge) பண்றாரு… யாரையும் கேட்கல. வொர்க் ஸ்டடியோ (Work study), ஜாப் ஸ்டடியோ (Job study), டைம் ஸ்டடியோ (Time study) அல்லது ஜாப் அனாலிசிஸோ (Job analysis) அல்லது டைம் ஸ்டடியோ எதாக இருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை ஒரு கூட்டம் நடத்திதான் அதை அமுல்படுத்த வேண்டும். தான் தோன்றித்தனமாக, சர்வாதிகாரமாக இந்த சி.இ.டி.எம்.இ அவர்கள் இங்கே நடைமுறைப்படுத்தி இப்பொழுது இந்த தொழிலாளர் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

​20 பேர் செய்யற வேலையை 4 பேர் செஞ்சா போதும்ன்னா எப்படி சாத்தியம்? அவங்க எல்லாம் ரோபோவா? ரோபோவா அவங்க? ஆகவே, மனித சக்தியை வீணடித்து தான் பேர் வாங்க வேண்டும், தான் அவார்டு (Award) வாங்க வேண்டும்… அதாவது இங்க 10 பேரு, 15 பேரு செய்யற வேலையை நான் செஞ்சேன்னு அவார்டு வாங்குறாரு. ஆனா, அந்த வண்டிக்கு ஏதாவது பிரச்சனைன்னு சொன்னா தொழிலாளர் மேல சார்ஜ் ஷீட். அதாவது அவார்டுக்கு அதிகாரிகள், சார்ஜ் ஷீட்டுக்கு தொழிலாளர்கள். என்ன நியாயம்?

​இது எங்களுக்கு இல்லை, ரயில்வே தொழிலாளர்களுக்கு இல்லை, ரயில்வே டிபார்ட்மென்ட்டுக்கே அசிங்கமா இருக்குற மாதிரி இந்த சி.இ.டி.எம்.இ நடந்து கொண்டிருக்கிறார். பேச்சுவார்த்தை கூப்பிட்டால் வருவதில்லை. இப்பொழுது கூட இங்க காலையில இருக்கு, வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்… என்ன சார், என்ன பிரச்சனைன்னு. காலையில இருந்து அவங்க வந்து ‘ஒர்க் டூ ரூல்’ செஞ்சுட்டு இருக்காங்க. எஸ்.ஆர்.எம்.யு தலையிடுது, நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம், மேல கொண்டு போவோம்னு சொல்றோம். முதல்ல இவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்திட்டுதானே டி.ஆர்.எம் (DRM), ஏ.டி.ஆர்.எம் (ADRM)-கிட்ட கொண்டு போக முடியும்? ஆகவே, இந்த சி.இ.டி.எம்.இ இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தி என்ன வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு உரியவற்றையும், தேவையான உபகரணங்களை உடனே வழங்க வேண்டும்.

இல்லையென்றால் ரயில்வே ஜங்ஷன் முன்பு நின்று பொதுமக்கள் இடையே எடுத்துக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்,

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.