Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக. மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் எழுச்சியாக கலந்து கொண்ட தொண்டர்கள்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் மாவட்ட செயலாளராக பதவி ஏற்ற பின்பு சுறுசுறுப்பாக கட்சி பணியாற்றி வருகிறார்.அதிமுகவில் இருந்து போன ஒரு சில ஓடுகாளிகளுக்கு பதிலாக இளைஞர்களை அப் பதவிகளுக்கு பொதுச் செயலாளரிடம் பரிந்துரை செய்து நியமனம் செய்தார்-

நேற்று மாலை இபி ரோடில் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து

(எதற்காக தனது சொந்த பணம் என இதில் குறிப்பிட்டது என்றால் இதுக்கு முன்பு இருந்த மாவட்ட ஒரு சில  செயலாளர்கள் அந்தப் பகுதியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபர்களிடம் பணத்தை வாங்கி தான் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் செய்வார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது)

நல திட்ட உதவிகள் மற்றும் அசைவ உணவும் அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல்,அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர்,சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம்,வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் முத்துமாரி,மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி ,டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பிளாட்டோ,பகுதி செயலாளர்கள் டி.எஸ்.எம். வசந்தம் செல்வமணி,

எம் ஆர் ஆர் முஸ்தபா, வீ.பி.எஸ்.மகாதேவன்,சுரேஷ் குப்தா,செல்லப்பா ,இலியாஸ் , சுதாகர்,மற்றும் நிர்வாகிகள் நத்தர்ஷா,ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை எஸ். எம்.டி. மணிகண்டன்,டிபன் கடை கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இந்த நிகழ்வில் எழுச்சி உடன் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் இடம் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டீர்களா என கேட்டபோது அதிமுக  தொண்டர்கள் எப்போதும் எழுச்சியாக தான் இருப்பார்கள்.கடந்த தேர்தலில் ஒரு அலையில் தோல்வி ஏற்பட்டு விட்டது,ஆனால் வரப் போகும் இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது தான் எனது முதல் வேலை என உறுதியுடன் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.