
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது விடுதலை.
திருச்சி மணிகண்டம் விஜிபி காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 30) இவர் திருச்சி ஹீப ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயராமனை கைது செய்து அவரிடமிருந்துபுகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று திருவானைக்காவல் பர்மா காலனி அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த லால்குடி அருகே உள்ள தைலகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 120 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட விஜயராமன் மற்றும் கணேசனை போலீசார் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

