Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : தொழிலில் நஷ்டம். தம்பதி தற்கொலை முயற்சியில் மனைவி சாவு.

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் பரிதாபம் . தொழிலில் நஷ்டம் தம்பதி தற்கொலை  முயற்சியில் மனைவி சாவு.

திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 83 ) இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (வயது 41) இவர் பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஏசுதாஸும் ஜனத்தும் பேச்சுவார்த்தையின்றி இருந்து வந்தனர். ஏசுதாஸ் திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் இருந்து வந்தார் இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஜனத் மற்றும் அவரது கணவன் பாலமுருகன் ஆகியோர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில்

உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அந்த தம்பதி அங்கு கடந்த 5ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து தகவல் தெரிந்த விடுதி பணியாளர்கள் இருவரையும் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜனத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பாலமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்ட்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார்

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.