தவெக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளி நாணயம் வாழங்கிய சனம் நிறுவனர்.
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள்.
நிர்வாகிகள் பங்கேற்பு.
தமிழக முதலமைச்சரும், த.வெ.க நிறுவனத் தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டும், பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தின் பிறந்த நாளை முன்னிட்டும் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில் மலைக்கோட்டை கிழக்கு பகுதி நிர்வாகிகள் மற்றும் 14,14அ ,15,15அ வட்ட கழக நிர்வாகிகள் ஏற்பாட்டில் அந்த பகுதிக்கு உட்பட்ட வார்டில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து , மெடல் அணிவித்து , கேடயம் வழங்கி மற்றும் 10 கிராம் எடை உள்ள வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில்
கட்சிக்காகவும் ,தலைவர் வெற்றிக்காகவும் அயராது உழைத்த மலைக்கோட்டை கிழக்கு பகுதிக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கு சுமார் 200 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்து , மெடல் அணிவித்து , கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ,சிந்தாமணி முத்து குமார்,மகேந்திரன்,மணிகண்டன் (சனம்),ஆதவன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, சார்பு அணி, வாக்கு சாவடி நிர்வாகிகள், மற்றும் சிறப்பு விருந்தினராக மார்க்கெட் கௌதம்,பாலக்கரை சூர்யா,மலைக்கோட்டை சதிஷ் குமார், ஏர்போர்ட் செந்தமிழ்,பாலக்கரை சிவா, ஏர்போர்ட் வெள்ளைச்சாமி,காந்தி மார்க்கெட் டர்க்கிஸ், சிந்தாமணி ஜீவா,கோபி மற்றும் மாவட்ட இளைஞர் அணி நிர்மல், மகளிர் அணி நிர்மலா, உறுப்பினர் சேர்க்கை அணி முகுந்தன், வழக்கறிஞர் அணி அப்துல் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பகுதி கழக நிர்வாகிகள் மலைக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் கணேஷ் குமார் ,நிர்வாகிகள் சுப்ரமணி , பாண்டுரங்கன் ,முருகன் ,மாரிஸ் ,தீபக் ,வித்யாபாரதி கார்த்தி ,புவனா ,அபிநயா ,கோகிலா,பாலா சுப்ரமணி மற்றும் வட்ட கழக செயலளர்கள் பார்த்திபன் ,
ஆனந்த் ,சிவ கணேஷ் ,சரத் குமார் மற்றும் பகுதி இளைஞர் அணி தீபன் , இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

