Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

காலி பணியிடம் இல்லாத நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் வரை ஸ்டேஷன் மாஸ்டர் பணியாளர்களுக்கு ஓவர் டைம் அலவன்ஸ் இடையூறு இன்றி வழங்கப்பட வேண்டும், ஜ. ஆர். டி. மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி நிறுத்தி அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கம் சார்பில்

அதன் தலைவர் ராமச்சந்திரா ராஜூ தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டி. ஆர். இ. யு. கோட்ட செயலாளர் கரிகாலன்,கோட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.