இன்றைய ராசிப்பலன் – 15.02.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் ஆதரவால் அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
Next Post