Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 16 ம் தேதி வரை நடக்கிறது:

0

'- Advertisement -

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று   தொடங்கி 16 ம் தேதி வரை நடக்கிறது: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..

Ad banner

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கி 16 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

தமிழ் முதல் கடவுள் முருக பெருமானின் கோவில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா மிக முக்கியமான விழா ஆகும் அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக திருச்சி வயலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில்நடை திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருக பெருமானை வழிபட்டனர். மேலும் காப்புகட்டுதல் கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை விழா மாலை நடக்கிறது.கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து சிங்காரவேலவர் நாளை 11 ஆம் தேதி முதல் முதல் 14 ஆம்தேதி வரை காலை 8 மணிக்கு கேடயத்தில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 16 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை சண்முகார்ச்சனை, இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பச்சை மயில், சேஷ, ரிஷப, வெள்ளி அன்னம், மயில், ஆட்டுக்கடா வாகனங் களில் திருவீதி உலாவும் நடக்கிறது.

13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வேலவர் சிங்கார அன்ன வாகனத்தில் எழுந்தருளி யானை முக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தலும், 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிங்கார வேலவர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுக சூரனுக்கு பெரு வாழ்வு அளித்தலும் நடக்கிறது. 6ம் நாளான கந்த சஷ்டி அன்று (15 ஆம் தேதி)

காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சுப்பிரமணியசுவாமி சக்திவேல் வாங்கும் அதை நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிங்காரவேலவர்ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு (சூரசம்ஹாரம்) அளித்தலும், முத்துக்குமார சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 16 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தேவசேனா

சுப்பிரமணிய சுவாமி திருக் கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

 

தமிழகத்தில் திருச்செந்தூர் உட்பட எந்த ஒரு முருகன் கோயிலில் இல்லாத சூரசம்ஹாரம் வயலூர் முருகன் கோயி லில் தொடர்ந்து 3 நாட்கள்

சூரபதுமனுக்கு பெரு வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இதேபோன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் கோவில்

வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.