திருச்சியில் 2 நாள் நடைபெற உள்ள மூத்தோர் தடகளப் போட்டியில் முன்பதிவு செய்து கொள்ள திருச்சி மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் அண்ணாவி அழைப்பு
மூத்தோர் தடகள சங்க திருச்சி மாவட்ட செயலாளரும் சர்வதேச தடகள வீரருமான முனைவர் நல்.அண்ணாவி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டிகள் – 2026
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மாவட்ட மூத்தோர் த
டகளப் போட்டிகள் – 2026 நடைபெற உள்ளது.
இடம்: திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம்
தேதி: 14.11.2026 மற்றும் 15.11.2026 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.
போட்டிகள்:
100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோல் ஊன்றித் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சுத்தியல் எறிதல்
தடை தாண்டும் போட்டிகள்: 80 மீ, 100 மீ, 110 மீ, 400 மீ
நடைப் போட்டிகள்: 2000 மீ, 3000 மீ, 5000 மீ
வயது பிரிவுகள்: 30+, 35+, 40+, 45+, 50+, 55+, 60+, 65+, 70+, 75+, 80+, 85+, 90+, 95+, 100+
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், டிசம்பர் 18 முதல் 20 வரை நடைபெறும் 44-வது மாநில மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்பர். அதனைத் தொடர்ந்து தேசியப் போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 17 முதல் 20 மார்ச் 2027 வரை நடைபெறுகிறது.
உடற்பயிற்சி, உடல் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு ஓட்டப் போட்டி – 15.11.2026
அதனைத் தொடர்ந்து, சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன.
10 வயதுக்குட்பட்டோர்: 1 கி.மீ • 16 வயதுக்குட்பட்டோர்: 2 கி.மீ • 16 வயதுக்கு மேற்பட்டோர்: 3 கி.மீ
16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், பொதுப் பிரிவில் எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
ஆர்வமுள்ள அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என முனைவர். நல். அண்ணாவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்,

