Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உதவ சென்ற தனது மீது அவதூறு பரப்பிய இஸ்லாமிய பெண் எழுதிக் கொடுத்த பத்திரங்கள், மற்றும் முழு விவரங்களை வெளியிட்டார் திருச்சி திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி .

0

'- Advertisement -

Ad banner

திருச்சி திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார் என இஸ்லாமிய பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி இருந்தார் . இது குறித்து கவுன்சிலர் காஜாமலை விஜி விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புகார் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள பெண் பரிதா என்பவர் துபாயில் உள்ள நண்பர் மூலம் தனக்கும் தனது தங்கைக்கும் என சொத்து பிரிக்கப்பட்ட அந்த வீட்டை தனது அண்ணன் ஆக்கிரமிப்பு வைத்துள்ளார் … நாங்கள் துபாயில் இருப்பதால் வர முடியவில்லை அதனால் அந்த வீட்டினை நீங்கள் இரண்டு வருடங்கள் பராமரித்து வாருங்கள், என பேசி (பரிதா பானு) மற்றும் (ரஹீமா பர்வீன்) அக்கா தங்கை இருவரும் ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்து தான் சென்றனர் ….

இதன் பெயரில்தான் அந்த வீட்டை பராமரித்து,கரண்ட் பில் கட்டி செக்யூரிட்டி மூலம் அந்த வீட்டை பாதுகாத்து வந்தோம், இதற்கு மாதம் 40 50 ஆயிரம் செலவாகியது, ஆனால் அந்த பெண் மாதம் மாதம் தருவதாக கூறிய பராமரிப்பு செலவு எதுவும் தரவில்லை, எனவே அந்த வீட்டை உங்கள் அண்ணன் பராமரித்துக் கொள்ளட்டும் என கூறிய போது நாங்கள் இந்தியா வந்தவுடன் உங்களிடம் நேரில் பேசுகிறோம் என கூறினார்,அதன் ஆடியோவும் உள்ளது …

ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் அவர் தனது வீட்டை நான் அபகரிக்க முயற்சி செய்வதாக வீணான புகாரை பரப்பி வருகிறார்.இது முற்றிலும் தவறான தகவல் அவர்கள் எழுதிக் கொடுத்த பத்திரத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்,

இனிமேலும் எனக்கும் நான் சார்ந்துள்ள திமுக கட்சிக்கும் அவதூறு ஏற்படும் வகையில் இவ்வாறு ஆடியோ வெளியிட்டால் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .

இந்த பிரச்சினையை காஜாமலை விஜயிடம் கொண்டு வந்த துபாய் நண்பர் விஜயன் நம்மிடம் பேசியபோது

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் துபாயில் பணிபுரிந்து வந்தோம். துபாயில் உள்ள சர்வதேச தமிழ் சங்கத்தில் உள்ள நண்பர் சிக்கந்தர் என்பவர் திருச்சியில் உள்ள பரிதா குடும்பத்தில் சொத்து பிரச்சனை உள்ளது,கொஞ்சம் பேசி தீர்த்து வைத்து உதவுங்கள்  என கூறினார், அதுவரை பரிதாவை நேரில் பார்ப்பது கூட கிடையாது..

அப்போது பரிதா திருச்சி காஜா மலையில் உள்ள தங்களது குடும்ப சொத்தை எனது தந்தை எனக்கும் எனது தங்கைக்கும் சொத்தை பிரித்து எழுதி தந்து விட்டார் ஆனால் எனது அண்ணன் மகமுத் பூட்டை உடைத்து அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அதை மீட்டு தர வேண்டும் என கூறினார் அதனால்  காஜாமலை விஜய் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம் ,அவரும் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்த வீட்டினை மீட்டு பராமரித்து வந்தார்,அதற்கு அக்கா தங்கை இருவரும் ஒப்பந்தம் எழுதி கையொப்பமிட்டு தந்துள்ளனர்,ஆனால் ஒரு வருடமாக  வீட்டின் பராமரிப்பு பணிக்கான பணம் தராததால் விஜி அவர்கள்  அதை அவரது அண்ணனிடம் (மகமூத்) கொடுத்து விடலாம் என கூறினார்,இதன்பின் எங்களை தொடர்பு கொண்ட பரிதா விரைவில் வீட்டை விற்று பராமரிப்பு பணி மற்றும் அனைத்து செலவுக்கான பணத்தையும் தந்துவிடுவதாக பேசினார் . . .அந்த வீட்டில் பூட்டை உடைப்பது,சிசிடிவி கேமராவை  உடைப்பது எல்லாம் அவரது சகோதரர் முகமுத் மற்றும் அவரது நண்பர்கள் தான்,அந்த வீடியோவில் பதிவில் கவுன்சிலர் விஜி இல்லை வீடியோவுக்கும் கவுன்சிலர் விிஜ அவர்களுக்கு  எந்த சம்பந்தமும் இல்லை,விஜி அவர்கள் பரிதா மற்றும் அவரது சகோதரிக்கு உதவுவதற்காக தான் இந்த பேச்சுவார்த்தைக்கு வந்தார்,ஆனால் அவர் மீது பரிதா குற்றம் சற்று இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது,நாங்கள் ஏன் இதில் தலை விட்டோம் என தற்போது நாங்கள் வருத்தப்படுகிறோம் என கூறினார்,மேலும் பரிதா பேசிய வீடியோ கால் , எழுதிய பத்திரங்களையும் நம்மிடம் காண்பித்தார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.