
திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே 17 வயதுடைய விஷால், ராகுல் ஆகிய 2 சிறுவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கூலித் தொழில் செய்து வந்த சிறுவர்கள் இருவரும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்பது பழிக்கு பழியா அல்லது முன்விரோதமாக என்ற கோணத்தில் சமயபுரம் காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் நேற்று முன் தினம் இரவு 11.30 மணி அளவில் நடந்து வந்த மருமகள் அவர்களை சாரா மாறியாக வெட்டி கொலை செய்துள்ளனர், இரண்டு சிறுவர்களின் உடல்களை பார்த்த அக்கம்பக்கத்தினர் சமயபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அங்கு வெட்டிக் கொல்லப்பட்ட இரண்டு பேருமே சிறுவர்கள் (இருவரும் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது) என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் ராகுல் (வயது 17), விஷால் (வயது 17) என்பது தெரிய வந்து உள்ளது. இருவரும் அந்த பகுதியில் கூலிவேலை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுவர்கள் இருவரையும் கொலை செய்தது யார், எதற்காக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக மற்றும் பழிக்கு பழியாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் குறித்த முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி நாளில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்மை காலமாக சிறுவர்களிடையே வன்முறை குணம் அதிகமாக பரவி வருகிறது. சர்வ சாதாரணமாக கொலை செய்யும் மனநிலைக்கு போகிறார்கள். அப்படி கத்தியை எடுக்கும் சிறுவர்கள், அதே கத்திக்கே பலியாகியும் வருகிறார்கள். மது , கஞ்சா , போதை மாத்திரை உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்ததே இந்த வன்முறைகளுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

