Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆன்லைன் வர்த்தகத்தல் ரூ 6.15 கோடி மோசடியில் மூளையாக செயல்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது .

0

'- Advertisement -

திருச்சியில் ஆன்லைன் வர்த்தகத்தல் ரூ 6.15 கோடி மோசடியில் மூளையாக செயல்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது .சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Ad banner

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ 6.15 கோடி மோசடி புகார் வழக்கில திருச்சியில் மூளையாக செயல்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்துசைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் கவியரசு. இவர் ஆன்லைன் வர்த்தக மோசடி மூலம் ரூ.8.5 லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் அம்பிகா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளை ஏற்கனவே வெவ்வேறு கட்டங்களில் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், இந்த மெகா மோசடி வழக்கின் முக்கிய மூளையாகச் செயல்பட்டு,

தலைமறைவாக இருந்த

திருச்சி மாவட்டம்மருங்காபுரி அருகே உள்ள தொட்டியம் பட்டி முருகசேன் என்பவரின் மகன் கோபிநாத் ( வயது39 )  சிவகங்கை மாவட்டம், காட்டு தலைவாசலை சேர்ந்த  சதாம் உசேன் (வயது33) ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட  17 மொபைல் போன்கள், 39 சிம் கார்டுகள், 30 ஏடிஎம் கார்டுகள், 8 காசோலை புத்தகங்கள்  4 வங்கி கணக்குப் புத்தகங்கள்,  1 பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 1 மாருதி பலேனோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த மின்னணு சாதனங்கள், போலியான வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி, இந்த கும்பல் அப்பாவி பொதுமக்களிடமிருந்து சுமார் 6.15 கோடி ரூபாய் வரை ஆன்லைன் மூலம் மோசடி செய்து சுருட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பொதுமக்களை ஏமாற்றிப் பெருந்தொகை மோசடி செய்த இந்த இரு முக்கியக் குற்றவாளிகளும் சைபர் சட்ட குற்றவாளிகளாக (குண்டாஸ்) அறிவிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த அதிரடி நடவடிக்கை ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.