மாநகர காவல் துறை ஆணையரை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு .
திருச்சி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை பி.சுரேஷ், செயலாளர்
பி. வி.வெங்கட் , துணைத் தலைவர் ஆர். பிரபு, பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் ஆகியோர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சில காவல் நிலையங்களில் காவல்துறை ஆய்வாளர் முன்புறம் அமர்வதற்கு நாற்காலிகள் போடுவதில்லை
என்றும் ஆகையால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர் எதிர்ப்புறம் அமர்வதற்கு நாற்காலி இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.

