Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக் கடைகளை திறக்க கோரி சாலையில் படுத்து மது பிரியர்கள் ஆர்ப்பாட்டம் . இந்தத் துறையை முறைப்படுத்தாவிட்டால் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டுவோம் மது பிரியர்கள் உறுதி

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் முசிறியில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்சினை காரணமாக அங்கிருந்த 2 அரசு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்தன

 

Ad banner

இதனால் நேற்று வழக்கம் போல் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் கடுமையான ஏமாற்றமடைந்தனர். இதன் காரணமாக, முசிறியில் திருச்சி – நாமக்கல் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மதுபானக் கடையில் மது வாங்குவதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

 

​கூட்டம் திடீரென அதிகரித்ததால் அந்தத் தனியார் கடையில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் மிக விரைவிலேயே விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து மது கிடைக்காமல் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள், அந்தத் தனியார் கடையை முற்றுகையிட்டு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நிற்காமல், திருச்சி – நாமக்கல் மாநில நெடுஞ்சாலையில் கடையின் முன்பாகச் சாலையின் குறுக்கே படுத்தும் உருண்டும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.​இந்தத் திடீர் மறியல் போராட்டத்தால் திருச்சி – நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். பூட்டப்பட்டுள்ள அரசு டாஸ்மாக் கடைகளை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் வலியுறுத்தியுள்ளது சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும் டாஸ்மாக் நிர்வாகத்தை தமிழக வெற்றி கழக அரசு முறைப்படுத்தாவிட்டால் வருகின்ற இடைத்தேர்தலில் நாங்கள் (மது பிரியர்கள்) தகுந்த பாடம் புகட்டுவோம்  என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.