Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாட்டில் ஸ்டிக்கர் மற்றும் ஹோலோகிராம் இரண்டையும் ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சரக்கு வழங்க கூடுதல் நேரம் ஆவதால் திருச்சியில் 142 டாஸ்மாக் கடைகள் மூடல்….மனமகிழ் மன்றங்களில் அடிதடி

0

'- Advertisement -

மது பிரியர்களை சமாளிக்க முடியாமல் திருச்சியில் 142 டாஸ்மாக் கடைகள் மூடல்

Ad banner

​டாஸ்மாக் கடைப் பணியாளர்களின் புதிய நடைமுறைச் சிக்கல் …

₹1,000-க்கு மேல் வாங்கும் போது கண்டிப்பாக UPI / G Pay மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. பணமாகப் பெற்றுக்கொண்டால், கணக்கு தானாக UPI பரிவர்த்தனைக்கு மாறிவிடுவதால் இரவில் கணக்கு சரிபார்ப்பதில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது.

​பாட்டில் திரும்பப் பெறும் நடைமுறை (Buy-Back): பாட்டில் ஸ்டிக்கர் மற்றும் ஹோலோகிராம் இரண்டையும் ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சரக்கு வழங்க கூடுதல் நேரம் ஆகிறது. பாட்டிலை திரும்ப வாங்கும் போது மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டியிருப்பதால் இரட்டை வேலை ஏற்படுகிறது.

​பணிச்சுமை மற்றும் வாடிக்கையாளர் மோதலால் க்யூவில் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு சரக்கு தர தாமதமாவதால் ஊழியர்களிடம் தகராறு செய்கின்றனர். மேலும், பார்களைப் பராமரிக்கும் பணிகளையும் ஊழியர்களே கவனிக்க வேண்டியுள்ளதால் கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர் .

 

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கான ரூ.10 திரும்ப பெறும் கட்டணத்தை, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையுடன் சேர்த்து வசூலிக்கும் நடைமுறை நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

காலி பாட்டில்களை திரும்ப பெறும் போதும் அதை ஸ்கேன் செய்து கணக்கிடும் புதிய தொழில் நுட்பமும் ஒரே நேரத்தில் அனைத்து கடைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தை படிப்படியாக அறிமுகப்படுத் தாமல், தமிழகம் முழுவதும் ஒரேநாளில் செயல்படுத்தியதால், பல்வேறு இடங்களில் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. கடைகள் திறக்கப்பட்டதில் இருந்தே ஸ்கேன் கருவிகள் அடிக்கடி செயலிழந்ததால், விற்பனை மற்றும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கண்டோன்மென்ட், கோட்டை, பாலக்கரை, காந்தி மார்க்கெட், உறையூர், அரியமங்கலம், கே கே நகர், முதலியார் சத்திரம், திருவெறும்பூர் என திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று நண்பகல் முதல் மூடப்பட்டது.

 

இரண்டாவது நாளாக இன்றும் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் அங்கும் இங்கும் அலை மோதியதை காண முடிந்தது.

புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால், முதல் நாளிலேயே மதுபான விற்பனை பாதிக்கப் பட்டதோடு, காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

தீபாவளி நேரத்தில் ஆள் பற்றாக்குறை ஒரு பக்கம், அரசு சொல்லும் செயலியும் சரியாக இயங்காததால் டாஸ்மாக் பணியாளர்கள் கடையை திறப்பதற்கு அச்சப்பட்டுள்ளனர்.

டிவைசே இல்லாத சூழ்நிலையில் தற்போது புதுமையான முறையில் பாட்டில் வாங்குவது அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கம்பெனியிலிருந்து சரக்கு வரும் பொழுது ஸ்டிக்கர்கள் சரியாக பாட்டிலில் ஒட்டப்படவில்லை. ஸ்டிக்கர்கள் தேய்மானம் அடைந்து அல்லது கிழிந்து மற்றும் நனைந்து இருப்பதால் பல்வேறு கடைகளில் ஸ்டிக்கர்கள் ஸ்கேனாகவில்லை.

இதனால் கடும் இன்னலுக்கு ஆளான டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் இன்றும் கடையை அடைத்துள்ளதால் மது பிரியர்கள் புதுச்சேரி மதுபானங்களை தேடி செல்லும் நிலையும், ராணுவ வீரர்களுக்கு அரசு வழங்கும் குறைந்த விலை மதுபாட்டில்களை பலர் அதிக விலைக்கு விற்பதை தேடிச் சென்று வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 142 டாஸ்மாக் கடைகள் இன்றும் மூடப்பட்டதால் எஃப் எல் 2 என கூறப்படும் மனமகிழ் மன்ற மதுபான கடைகளை தேடி அலைகின்றனர். திருச்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் இருக்கும் நிலையில் அங்கும் மதுபான தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிலர் கடைகளை பூட்டி காவல் துறையின் பாதுகாப்பு கோரியுள்ளனர். மொத்தத்தில் தவெக அரசு வந்த நாள் முதல் மதுபான கடைகளில் மதுபான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டிருப்பதால் மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மகிழ் மன்றங்களில் கேட்கும்  சரக்கு இல்லை என மது பிரியர்கள் அடிதடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.