Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்திய மகளிர் அணி சாம்பியன்

0

'- Advertisement -

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் உகாண்டா அணியை 35–15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Ad banner

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் லீக் சுற்று முடிவில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. அதில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்தியா 39–14 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

மற்றொரு அரையிறுதியில் உகாண்டா அணி கென்யாவை 23–21 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இதையடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி புள்ளிகளை குவித்தது.

இறுதியில் இந்திய அணி 35–15 என்ற புள்ளிகள் கணக்கில் உகாண்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்திய மகளிர் அணி தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.