Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக வளர்ச்சிக்காக பாரதிய ஜனதாவுடன் தவெக அரசு இணைந்து செயல்படும், சோபா செட்டுடன் அமைச்சர் பதவி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் பேட்டி

0

'- Advertisement -

தமிழக வளர்ச்சிக்காக பாரதிய ஜனதாவுடன் தவெக அரசு இணைந்து செயல்படும், சோபா செட்டுடன் அமைச்சர் பதவி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் திருச்சியில் பேட்டி

Ad banner

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இணையதள நண்பர்கள் சந்திப்பு வருகிற 14-ஆம் தேதி சனிக்கிழமை திருச்சியைஅடுத்த சமயபுரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது இந்த இணையதள சந்திப்பு லோகோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1500 ஆண்கள் பெண்கள் கலந்து கொண்ட கருத்துக்களை பரிமாறி உள்ளனர்.

இந்த நிகழ்வில் இதயங்களை இணைப்போம் என்ற இணையதளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. இந்தியாவில்  4,796 சமுதாயங்களும் உள்ளன . அவர்கள் வியக்கும் வகையில் இந்தியா மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற வாழக்கூடிய பாரம்பரியத்தை இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைந்தது இதுவே முதல் முறையாகும்.

60 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பயணித்து வந்தோம்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் தான் இருந்தோம் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

தமிழகத்தின் யாரும் எதிர்பாராத சம்பவமாக விஜய் தலைமையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

திமுக பக்கத்தில் இருந்த கட்சிகள் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்ற நோக்கத்தில் பல்வேறு தரப்பினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 21 பேர் கொண்ட குழுக்களை கொண்டு முடிவு செய்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக வளர்ச்சிக்காக மத்திய பாரதிய ஜனதா அரசுடன் தவெக அரசு இணைந்து செயல்படும், எதிர்ப்பதும் இல்லை ஆதரிப்பதும் இல்லை.

பேட்டியின் போது அமைச்சர் ஷாஜகான்,மாநகர செயலாளர் ஹபிபுர்

ரகுமான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கடைசி வரை திமுகவுடன் தான் பயணிப்போம் என்ற கூறிய இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் காதல் மொய்தீன் தனது அலுவலகத்திற்கு புதிய சோபா செட் மற்றும் ஒரு அமைச்சர் பதவி (ஷாஜகானுக்கு) தருவதாக பேச்சுவார்த்தை முடிந்தவுடன் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.