Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வாலிபருக்கு அரிவாளல் வெட்டு..

0

'- Advertisement -

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வாலிபருக்கு அரிவாளல் வெட்டு….

Ad banner

திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஏயேசுதாஸ் (வயது 47) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த லூயிஸ் பிரிட்டோ (வயது 20) என்பவர் மது அருந்தியுள்ளார். இது குறித்து ஏசுதாஸ் கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து அவர் கலைந்து சென்று விட்டார். இதன் காரணமாக கடந்த 29ஆம் தேதி லூயிஸ் பிரிட்டோ தாமஸ் மற்றும் சிலர் யேசுதாஸ் வீட்டிற்குள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஏசுதாஸ் கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து லூயிஸ் பிரிட்டோவை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தாமஸ் பற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேறு நபர்களை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.