ஸ்ரீரங்கத்தில் அரிசி கடத்தல் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மற்றும் கோதுமைகளை அந்த பகுதியில் உள்ள சில்லறை வியாபாரிகளிடம் வாங்கி அரிசி கடத்தும் கும்பல் அடிக்கடி வேன்களில் கடத்திச் சென்று உள்ளது.
இது சம்பந்தமாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்நேற்று புதன்கிழமை இரவு திருச்சி மேல வாசல் பகுதியில் இருந்து ஒரு வேன் செக் போஸ்ட் வழியாக செல்ல முயன்றுள்ளது. அந்த நேரத்தில் அந்த வேன் மீது சந்தேகப்பட்ட திருச்சி மாவட்ட பாஜக இளைஞர் அணியை சேர்ந்த ERV விஜி தலைமையிலான இளைஞர்கள் அந்த வேனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது அந்த வேனில் ரேஷன் கோதுமை மற்றும் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. உடனடியாக அந்த வேனை விஜி தலைமையிலான இளைஞரணியினர் நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த வேனில் உள்ள டிரைவர் பாஜக இளைஞர் அணியினர் வேனை நிறுத்தவும், வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் பாஜக நிர்வாகி ERV விஜி காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளார் …இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த வேனை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த வேனில் உள்ள அரிசி கோதுமை மூட்டைகள் யாருடையது எங்கிருந்து கடத்தினார்கள். யாருக்கு கடத்தப்பட்டது. என்ற விபரம் இன்னும் தெரியவில்லை
பாஜக விஜி தலைமையிலான இளைஞரணியினர் செய்த இந்த செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

