5 ரூபாய் பாக்கெட்டில் 15 கிராம் எனப் போட்டுவிட்டு 4 கிராம் லேஸ் சிப்ஸ் விற்பனை …. இனியும் நம்பி ஏமாறாதீர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் குறிப்பிட்ட அளவை விடக் குறைவானசிப்ஸ் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், பெப்சிகோ இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் ஆணையம் ரூ.8,000 இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூரைச்சேர்ந்த சந்திரமன் ஜலான் என்பவர், 2020 நவம்பர் 10ஆம் தேதி மெட்ரோகேஷ் அண்ட்கேரி கடையில் பொருட்கள் வாங்கிய போது,ரூ.5 மதிப்புள்ள லேஸ் சிப்ஸ் பாக்கெட்டையும் வாங்கியுள்ளார்.
அந்தப் பாக்கெட்டில் 15கிராம் சிப்ஸ் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதற்குள் வெறும் 4 கிராம் மட்டுமே இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக் குநியாயம் கேட்டு நுகர்வோர் ஆணையத்தை அணுகினார்.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், பெப்சிகோ நிறுவனம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஆஜராகாததையும் புகார்தாரர் சமர்ப்பித்த ஆவணங்களையும்கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, புகார்தாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.5,000 மற்றும் வழக்குச்செலவுகளுக்காக ரூ.3,000 என மொத்தம் ரூ.8,000 வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும்,சிப்ஸ் பாக்கெட்டின் விலையான ரூ.5-ஐ ஆண்டுக்கு 6சதவீத வட்டியுடன் திருப்பித்தரவும்ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. உத்தரவிட்ட காலத்திற்குள் ரூ.8,000 செலுத்தப்படாவிட்டால், அந்தத்தொகைக்கும் ஆண்டுக்கு 6 சதவீத வட்டிவி திக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நம் வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி வாங்கி சாப்பிடும் இந்த லேஸ் பாக்கெட் குறித்து அனைவரும் புகார் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

