Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடை பணியாளரிடம் உரிமையாளர் போன்ற செல்போனில் பேசி ரூபாய் 9 லட்சம் நூதன மோசடி

0

'- Advertisement -

திருச்சியில் கடை பணியாளரிடம் உரிமையாளர் போன்ற செல்போனில் பேசி ரூபாய் 9 லட்சம் நூதன மோசடி

Ad banner

மர்ம ஆசாமிக்கு சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு..

 

திருச்சியில் தொழிலதிபர் போல் நடித்து செல்போனில் பேசி ரூபாய் 9 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்

பல்வேறு மோசடியில் மர்ம ஆசாமிகள் ஈடுபடுவது அதிக அளவு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் நவீன முறையில் மோசடியில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. திருச்சியில் தொழிலதிபர் ஒருவரிடம் நூதன முறையில் ரூபாய் 9 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு ….

திருச்சி எடமலைப்பட்டி புதுவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) தொழிலதிபரான இவர் சங்கிலி யாண்டபுரத்தில் ஜிப்சம் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் தன்னுடைய வங்கி கணக்கு தொடர்பாக கணக்கு வழக்குகளை பார்க்க ஒரு பெண் கணக்காளரை நியமித்து இருந்தார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் பெண் கணக்காளரின் செல்போனுக்குவாட்ஸ் அப் நம்பரில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்பொழுது செல்போனில் உரிமையாளர் விஜயகுமாரின் நம்பரும் புகைப்படமும் அதில் வந்தது இதனைப் பார்த்த அந்தப் பெண் கணக்காளர்கடையின் உரிமையாளர் விஜயகுமார் தான் பேசுகிறார் என்று நினைத்து தொடர்ந்து பேசினார்.எதிர் முனையில் பேசிய மர்ம ஆசாமி நான் கடையின் உரிமையாளர் தான் பேசுகிறேன். என்னுடைய வங்கி கணக்கு நம்பரை கொடுக்கவும். அவசரமாக ரூபாய் 9 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். கடையின் உரிமையாளர் தான் கேட்கிறார் என்று அந்த பெண் கணக்காளர் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் கூறிவிட்டார்.சிறிது நேரத்தில் ரூபாய் 9 லட்சம் பணம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எடுத்து உண்மையான விஜயகுமாரின் செல்போனுக்கு ரூபாய் 9 லட்சம் பணம் எடுக்கப்பட்டது என்று குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் உடனடியாக தனது கடையின் கணக்காளரை தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை கேட்ட போது அவர் சிறிது நேரத்துக்கு முன்பு நீங்கள் தான் என்னிடம் பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டீர்கள் என்று கூறியுள்ளார் ஆனால் அவர் நான் உங்களுக்கு பேசவில்லை என்று கூறி மறுத்து உள்ளார். பிறகுபெண் கணக்காளரின் செல்போனை வாங்கி பார்த்த பொழுது அதில் தான் தெரிந்தது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜயகுமார் போன்று நடித்து பேசி அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி ரூபாய் 9 லட்சம் பணத்தை மோசடி செய்து எடுத்துள்ளார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விஜயகுமார் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு தொழிலதிபர் போல் நடித்து ரூபாய் ஒன்பது லட்சம் பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.