திருச்சி தற்கொலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு மாநிலக் கிளை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளையின் சார்பாக நடைபெற்றது.
இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை இணைச் செயலாளர் இன்ஜினியர் ஆர் . மனோகர் ராஜ் வரவேற்புரையாற்றினார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு மாநில கிளையின் தலைவரும் இந்திரா கணேசன் கல்லூரியின் தலைவருமான இன்ஜினியர் ஜி ராஜசேகர் நிகழ்வுக்கு தலைமை ஏற்று தற்போது உள்ள மனிதர்களில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. போதையும் வேதனை தருகிறது. இரண்டும் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது.இளைஞர்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்தும் மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்தும் விலகி வாழ்க்கையை வளமாக்கி கொள்ள வேண்டும் என்று பொருள்பட உரை நிகழ்த்தினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளையின் செயலாளர் எம். ஜவகர்ஹாசன் அவர்களும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட. பூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா. குணசேகரன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக போதை மறுவாழ்வு மைய திட்ட இயக்குனர் எம் பாரதி மோகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய போதை பழக்கம் பற்றியும் அதனை எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி அது எவ்வாறு ஆரம்பிக்கிறது அது சமூகத்தில் குடும்பத்தில் எவ்வாறு ஒருவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது என்பதையும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள் தற்கொலை என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுவதற்கான காரணத்தையும் கூறி அத்தகைய எண்ணம் நீங்கி வாழ்வில் உயர்வு பெறுவதற்கான கருத்துரைகளையும் வழங்கினார். நிறைவாக திருச்சிராப்பள்ளி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளியின் இணைச்செயலாளர் பி மோகன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் இந்திரா கணேசன் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

