Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே.கே.நகரில் ஒரே இரவில் 7 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை,கேட்கவில்லை தொடரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அதிர்ச்சி

0

'- Advertisement -

திருச்சி கே.கே.நகரில் ஒரே இரவில் 7 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை,கேட்கவில்லை தொடரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அதிர்ச்சி

Ad banner

மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சி கே.கே.நகரில் அடுத்தடுத்து 7 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனி இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றனர்.இதேபோன்று கேகே நகர் எல்ஐசி காலனி இந்திரா நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள கோழிக்கடை, பாத்திர கடை, காய்கறி கடை உள்பட 7 கடைகளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம கும்பல் அள்ளிச் சென்று உள்ளனர். இன்று காலை கடைக்கு வந்து பார்த்த வியாபாரிகள் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

.இது குறித்து வியாபாரிகள் கே .கே .நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த

புகாரின் பேரில் கே .கே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

இது குறித்து வியாபாரிகள் கேகே நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் கைரேகை நிபுணர்கள்

விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் குறித்து கேகே நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் முன்பு எல்ஐசி காலனி இந்திரா நகர் பகுதியில் ஹனீபா என்பவரது மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ 2.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்று ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கே கே நகர் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 7 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

கேகே நகர் எல்ஐசி காலனி இந்திரா நகர் பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருகிறது இந்த திருட்டுக்களை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.