தொகுதி குறையை கூற நிருபருடன் வந்த நபரை கெட்ட வார்த்தைகளால் திட்டி காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திய திருச்சி துறையூர் தொகுதி தவெக எம் எல் ஏ வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர்

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னை காணவந்த நிருபர் மற்றும் கார்த்திக் என்பரை கண்மூடித் தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகன் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தனது சமூக வலைதளத்தில் நாம் தமிழர் கட்சி துரை முருகன் பகிர்ந்துள்ளார். அதில், துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் என குறிப்பிட்டுள்ள அவர், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவி சங்கர் வகிக்கும் துணை சபாநாயகர் பதவியை குறிப்பிட்டு, பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள கார்த்திக் குமார் முயன்றதாகவும், ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில், தீபாவளி நாளான நேற்று அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக் குமார், அங்குள்ள துணை சபாநாயகரின் வீட்டின் அருகே அவரை சந்தித்து தன் பகுதி பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக் குமாரைத் தகாத வார்த்தைகளால் (தே…. பயலே ) திட்டிய துணை சபாநாயகர், அவரை சரமாரியாகத் தாக்கி எட்டி உதைத்து விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமார், “நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன்” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெயரைப் பலமுறை உச்சரித்தும், அத்தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இச்சம்பவத்தில் காயமடைந்த கார்த்திக் குமார், தற்போது மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்படுகிறது. குறைகளை தெரிவிக்க வந்த சொந்த தொகுதி மக்களிடம், அரசு பொறுப்பில் உள்ள ஒரு துணை சபாநாயகர் இதுபோன்று அடாவடியில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உரிய விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட துறை சபாநாயகர் ரவிசங்கர் மீது தக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்

