Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஞ்சபூர். ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகே வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

0

'- Advertisement -

பஞ்சபூர். ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகே வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

 

Ad banner

பழனியை சேர்ந்த ஒரு வாலிபர் தனது வேலை விஷயமாக கடந்த 12 ஆம் தேதி தனது சொந்த ஊர் செல்வதற்காக திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் வந்துள்ளார், அப்போது அவர் திருச்சி மதுரை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து இரும்பு கம்பியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 10,000 பணம் , செல் போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இது குறித்து அவர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்த கேசவசபூசன் (வயது 19), பிரகதீஸ்வரன் (வயது 22) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.