திருச்சி செசன்ஸ் கோர்ட் இன்ஸ்பெக்டர் மாற்றம், குற்றவியல் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி,சங்க செயலாளர் வெங்கட்
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழக்கறிஞர் திலீபன் விசாரணையில் கருமண்டபத்தில் உள்ள அமுதம் ஹோட்டல் உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு ஒழுங்காக வழக்குப்பதியாத திருச்சி செசன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் அவர்களை கண்டித்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரி நேற்று மதியம் திருச்சி கோர்ட் அருகே குற்றவியல் வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் திருச்சி காவல் சரகத்துக்கு நேற்று மாலையே மாற்றம் செய்யப்பட்டு
புதிதாக கூத்தாநல்லூர் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வந்த புதிய ஆய்வாளர் எஸ். விஜயகுமார் இன்று காலை 8 மணி அளவில் பொறுப்பேற்று கொண்டு தனது பணிகளை தொடங்கி விட்டார் ,இது திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ..

