Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் சர்ச்சைக்குரிய 1510 நூல்கள் அகற்றம்,

0

'- Advertisement -

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் விவகாரம் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற

Ad banner

அதிரடி சோதனையில் சர்ச்சைக்குரிய 1510 நூல்கள் அகற்றம்,

கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோவை பெரியார் அறிவுலக நூலகத்தை அண்மையில் முதல்வர் விஜய் த திறந்து வைத்தார். அந்த நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் போலியானவை என்றும், நூல்களை கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு போலி நூல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பொது நூலகத் துறை இயக்குநரகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட மைய நூலகத்திலிருந்து அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் 1,510 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதுகுறித்து திருச்சி மாவட்ட நூலக அலுவலர்கள் கூறியதாவது;

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 8 முழுநேர கிளை நூலகங்கள், 56 கிளை நூலகங்கள், 65 ஊர்ப்புற நுலகங்கள், 11 பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 141 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.நிகழாண்டில் மேற்கண்ட நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் பதிவு கடந்த பிப்ரவரியில் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து பதிப்பகங்களில் இருந்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் புத்தகங்கள் வந்துள்ளன. மாவட்ட மைய நூலகத்துக்கு வந்த புத்தகங்கள் இங்கிருந்து கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என அனைத்து நூலகங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டில் அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து ரூ.2.13 லட்சம் மதிப்பில் 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1,024 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து ரூ.96 ஆயிரம் மதிப்பில் 46 தலைப்புகளில் 486 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொது நூலகத் துறை இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கொள்முதல் செய்யப்பட்ட 1,510 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிகழாண்டில் மட்டுமே மேற்கண்ட பதிப்பகங்களில் இருந்துபுத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சிக்மா பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் ஏதும் கொள்முதல் செய்யப்படவில்லை. இதேபோல, போலி எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்பேரில், போலி எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்து அனைத்து நூலகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இருந்தால் அந்த நூல்களும் உடனடியாக அகற்றப்படும் என்றுகூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.